33

ஒரு சமயம் குருநானக் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார். அந்தக் கிராமத்து செல்வந்தர் வீட்டில் குருநானக்கிற்கு உணவு தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த உயர்ந்த உணவை உண்ணாமல் ஒரு ஏழைக் குடியானவன் வீட்டில் அவன்கொடுத்த காய்ந்த ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டார்.

குருஜி ஏன் இப்படி? என்றார் செல்வந்தர். நீ தயாரித்த ரொட்டியைக் கொண்டு வா என்றார் குருநானக். உடனே செல்வந்தர் தன் வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளைக் கொண்டு வந்தார். குருநானக் ரொட்டியைப் பிளந்தார். அதிலிருந்து இரத்தம்கொட்டியது. அதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் வியந்து நின்றார்.

உடனே குருநானக் நீ எந்த ஏழைகளை கசக்கிப் பிழிந்து பொருள் சம்பாதித்தாயோ அந்த ஏழைகளின் இரத்தந்தான் இது என்றார்.

பொதுவாக ஏழைகளை துன்பப்படுத்துபவர்கள் தான் அதிகம். ஆனால் அப்படிப்பட்ட ஏழைகளிடம் தம் இதயங்கனிந்த அன்பைச் செலுத்தியவர் பெருந்தலைவர்.

1962ல் தேர்தல் நேரம் பெருந்தலைவரின் கார் வீதியில் நிற்பதைப் பார்த்து ஒரு சிறுவன் காரை நெருங்கி வணக்கம் ஐயா என்றான்.

என்னபடிக்கிறாயா? என்று மலர்ச்சியோடு சிறுவனை விசாரித்தார் முதல்வர். சிறுவன் உடனே பதில் கூறாமல் சுற்றுமுற்றும் சென்று பார்த்து ஒரு நோட்டீசை எடுத்து தனது கால் சட்டையில் துடைத்து தலைவரிடம் நீட்டி கையெழுத்து வேண்டும் என்றார்.

சரி என்ன படிக்கிறே என்று மீண்டும் கேட்டார். பையன் தயங்கியபடி படிக்கலை அந்த டீ கடையில வேலை பார்க்கிறேன் என்றான். அந்தச் சிறுவனிடம் வயது, சம்பளம் எல்லாம் பற்றி அன்போடும், கனிவோடும் விசாரித்து விட்டு அந்தச் சிறுவனின் கன்னத்தில் செல்லமாகத் தட்டியபடி கையெழுத்திட்டுக்கொடுத்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்து போலீஸ்காரர் வந்து அந்தச் சிறுவனை அப்புறப்படுத்த முயன்றார். காமராசர் அந்த போலீசை தடுத்து நீ பார்த்துக்கொண்டிருந்த வேலையைப் போய்ப்பார். எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. பையனை விடு என்றார்.

இவ்வாறு ஏழைச் சிறுவனின் சிறிய ஆசையைக் கூ ட உளமாரச் செய்து கொடுத்து அவனது முக மகிழ்ச்சியில் இறைவனைக் கண்டார் பெருந்தலைவர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book