75

ஒரு செல்வந்தருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவரோ தன் நம்பிக்கைக்குரிய அடிமை ஒருத்தனது சொல்படி மட்டுமே நடந்து வந்தார். செல்வம் மேலும் மேலும் பெருகியது.

திடீரென கடும் நோய் வாய்ப்படட செல்வர் படுக்கையில் விழுந்தார். வஞ்சக அடிமை தன் விருப்பம் போல அவரை உயில் எழுதச்செய்தான். அவரும் அப்படியே செய்துவிட்டு இறந்தார்.

அந்த உயிலில் எனது மூன்று மகன்களும் எனது செல்வத்தில் அவர்கள் விரும்பும் ஒரு பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி உள்ள அனைத்துச்செல்வங்களும் எனது அடிமைக்கு என்று எழுதப்பட்டிருந்தது.

மூத்த மகன் விலை உயர்ந்த மாளிகையையும், இரண்டாமவன் வணிகம் நடக்கும் கடையையும் எடுத்துக்கொண்டனர். கடைசி மகன் அறிவுக் கூர்மையுடன் என் தந்தைக்கு அடிமையாக இருந்த இவர் எனக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்று கேட்டான். அடிமையோடு சேர்ந்த செல்வம் அவனுக்குக் கிடைத்தது. கிடைப்பதெல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் தனக்குக் கிடைப்பதைக் கூட பிறருக்குக் கொடுத்து மகிழ்பவர் தலைவர்.

பெருந்தலைவருக்கு ஒரு பழக்கம் உண்டு. கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது அன்பர்கள் அவருக்குப் பயன்படக்கூடிய கதர்த் துண்டுகள், சால்களை அணிந்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்.

விலை உயர்ந்த பளபளக்கும் சால்வைகளை ஏற்கும்போது அவருக்கு மகிழ்ச்சி இருக்காது. மாலை அணிவித்தால் விரும்பவே மாட்டார்.

1974ஆம் ஆண்டு தலைவரது பிறந்த நாள் விழா. காலை நேரத்தில் அவரது இல்லத்தில் பெருங்கூட்டம். ஆண்டு தோறும் அவருக்குப் பிறந்த நாள் கேக்கொண்டு வருபவர் திருவல்லிக்கேணி திரு.எம்.எஸ்.சம்பந்தப்பா என்பவர். தலைவருக்கு இந்த மாதிரிச் செயல்களில் உள்ள நாணத்தோடு கேக் வெட்டினார்.

முண்டியடித்து நின்ற தொண்டர்களின் கதர்த்துண்டு சால்வைகளை முகத்தில் சிரிப்போடு ஏற்றுக் கொண்டார். மலர் மாலைகளை கையில் பிடித்து வாங்கினார். தொண்டர்கள் அணிவிக்கும் மாலை, துண்டில் ஏன் இந்த வேறுபாடு? என்று பலரும் சிந்திப்பார்கள். தலைவரின் உதவியாளர் வைரவன் இதற்கு விடையளித்தார்.

தலைவருக்கு பூமாலைகள் பிடிக்காமல் போனதுக்கு காரணம் உண்டு. அவை அனைத்தும் எந்தப் பயனும்இன்றி உடனடியாக எருக்குழியைச்சென்று சேரும். அது மட்டும் அல்லாமல் பூக்களிடையே உள்ள புழுக்கள் கழுத்தைக் கடித்துப் புண்ணாக்கி விடுவதும் உண்டு. ஜரிகை நூல் சுற்றிய மாலைகள் என்றால் அந்த நூல் கழுத்தில் அறுத்து கீறல்கள் உண்டாகும் நீரிழிவு தாக்கிய உடலானதால் கழுத்தில் மாலைகள் ஏற்படுத்தும் கீறல்களால் துன்புற்றத் தலைவர் மலர் மாலைகளை விரும்புவது இல்லை.

ஆனால் தலைவருக்கு அணிவிக்கப்படும் துண்டுகள் அனைத்தும் பாலமந்திர்என்ற அனாதைச் சிறுவர் பள்ளிக்கு அனுப்பப்படும். அது அந்தக் குழந்தைகளுக்கு உடனடியாகப் பயன்பட்டு உதவும். எனவே தலைவர் துண்டுகளை விரும்புவார்.

அது மட்டும் அல்லாமல் தொண்டர்கள்அவர் காலில் விழுந்து கும்பிடுவதை ஏற்கமாட்டார். “அதென்ன மனுஷனுக்கு மனுஷன் காலில் விழுந்து கும்பிடுறதுஎன்று கூறுவார். சில நேரங்களில் காலில் விழுபவர்களை அடித்தும் விடுவார். அந்தச் செல்லத் தட்டு பெறுவதற்காகவே சிலர் அவர் காலில் விழுவதுண்டு.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காமராஜ் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book